ரம்ஜான் கொண்டாட ராமநாதபுரம் சென்றவர்கள் கார் வேப்பூரில் கவிழ்ந்து விபத்து ஒருவர் இறந்தார் 5 பேர் காயம்
சென்னையிலிருந்து ரம்ஜான் கொண்டாட இராமநாதபுரம் சென்றவர்களின் வேப்பூர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட ஐந்து பேர் காயமடைந்தனர்
சென்னை திருவல்லிக்கேணி, திருநாவுக்கரசு தெருவை சேர்ந்த ஜெயினுலாபுதீன் என்பவர் தனது சொந்த ஊரான இராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூருக்கு ரம்ஜான் பண்டிகை கொண்டாட. டிஎண், 40, எப், 9839 என்ற எண்ணுள்ள இரிடிகா காரில் இராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர் காரை பார்திபனூரை சேர்ந்த சதக்கத்துல்லா மகன் அப்துல் ஹக்கீம் (வயது 44), என்பவர் ஓட்டி சென்றார்
சென்னை திருச்சி சாலையில் கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே சென்ற போது கார் ஒட்டுனர் தூக்க கலக்கத்தில் சென்றதில் சென்டர் மீடியனில் கார் மோதி இடது புற பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
இதில் காரில் பயணம் செய்த. ஜெயினுலாபுதீன் மகன் அப்துல்லா (வயது 11) என்பவருக்கு தலையில் பலத்த அடி பட்டது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது அவரது மனைவி சையது அலி பாத்திமாவிற்கு இடது காலில் எலும்பு முறிவும், மகள் பாத்திமா (வயது 14) என்பவருக்கு லேசான. அடியும், ஆயிசா (வயது 10) என்பவருக்கு இது காலில் எலும்பு முறிவும் ,மகள் ஜெலத் (வயது 4) என்பவருக்கு லேசான அடியும் பட்டது.
காயம்பட்ட அனைவரும் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைகாக. திருச்சி காவேரி மருத்துவமனையில் சேர்க்கபட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அப்துல்லா (வயது 11) என்ற சிறுவன் மட்டும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்
இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலிசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:
Post a Comment