விருத்தாசலத்தில் நஞ்சில்லா உழவின் அவசியம் மற்றும் நம்மாழ்வார் மரபு விதை மையம் மற்றும் நஞ்சில்லா உழவு அமைப்பின் சார்பாக விவசாயிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 May 2022

விருத்தாசலத்தில் நஞ்சில்லா உழவின் அவசியம் மற்றும் நம்மாழ்வார் மரபு விதை மையம் மற்றும் நஞ்சில்லா உழவு அமைப்பின் சார்பாக விவசாயிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி.


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் நஞ்சில்லா உழவின் அவசியம் மற்றும் நம்மாழ்வார் மரபு விதை மையம் மற்றும் நஞ்சில்லா உழவு அமைப்பின் சார்பாக விவசாயிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி.


பாரம்பரிய மரபு விதைகளை பாதுகாத்து பகிர்ந்தளித்தல்.பாரம்பரிய அரிசி வகைகள் விலை நிர்ணயம் செய்தல்.பாரம்பரிய மரக் கன்றுகளை வளர்த்தல் பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது.


மனித குலத்திற்கு கேடுகளை விளைவிக்கும் பிராய்லர் கோழி, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள் விஷத்தில் விளைந்த அரிசி வகைகள், குழந்தைகளை மெல்லக் கொல்லும் ஜெல்லி கிண்டர் ஜாய் மற்றும் இது போன்ற துரித உணவுகள் போன்ற எண்ணற்ற உணவுகளை உண்டு விட்டில் பூச்சிகள் போல் மாட்டித் தவித்துக் கொண்டு வரும் நம் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நமது சமுதாயம் நோயற்ற வாழ்வில் வாழ்ந்திட தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழவேண்டும் என்கின்ற விழிப்புணர்வு நிகழ்வாக கடந்த 1.5. 2002 அன்று உழவர்களுக்கு நாட்டுக்கோழிகள், கருங்கோழிகள், தேனீ வளர்ப்பு பயிற்சி மற்றும் தேனீப் பெட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டது.


மாடித் தோட்டம் வீட்டுத்தோட்டம் அமைக்க விரும்பும் பொதுமக்களுக்கு நாட்டு காய்கறி விதைகள் வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் விஜயகுமார் பாரம்பரிய நெல் பாதுகாவலர்கள் திருவாளர் காரைக்கால் பாஸ்கர், ஜெயங்கொண்டம் ஓய்வு பெற்ற ஆசிரியர் சுந்தரேசன், தாராசுரம் இளந்திரையன், தாமரைக்கண்ணன், கணேசன், தியாகராஜன், பசுமை சாரல் எட்வின், வேளாண் பொறியியல் துறை அதிகாரி பன்னீர், முருகன்குடி முருகன், விருதாச்சலம் சுரேஷ் சாத்தமங்கலம் விஜயன் முதனை பன்னீர்செல்வம் ராஜ்குமார், ஆண்டிமடம் ப்பாஷ்சர் வின்சென்ட்., விருதாச்சலம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் டாக்டர் மு வள்ளுவன். ஊராட்சி மன்ற தலைவர் தியாக. நீதிராஜன், பரவலூர் நிலக்கிழார் ஆசைத்தம்பி, ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமசாமி, நடராஜன். வழக்கறிஞர்கள் மற்றும் இயற்கை விவசாயிகள் வெங்கடேசன், நெடுமாறன், மாய. மணிகண்டன், இயற்கை ஆர்வலர்கள் நாட்டார் முருகன், பாலமுருகன், காசிநாதன். மூர்த்தி, சுப்பிரமணியம் பிள்ளை, கனகசபை பிள்ளை, ஓய்வு பெற்ற காவல் அதிகாரி எம்ஜிஆர், அக்ரி பழனிச்சாமி விருதாச்சலம் கோட்டை முனீஸ்வரர் கோவில் நிர்வாகிகள் காந்தி, கதிர்வேல், பரந்தாமன், மெக்கானிக் சரவணன், விழித்திரு பத்திரிகை பூவராகன், சண்முகம், ஐயப்பன், சக்தி, விமல்ராஜ் மற்றும் எண்ணற்ற கிராம பொதுமக்கள் நண்பர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்; இரா.சீனிவாசன்.


No comments:

Post a Comment

*/