விருத்தாசலம் பெரியார் நகர் தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம்,விருத்தாசலம் தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதியதாக உறுப்பினர் சேர்ப்பது, கட்சியை வலுப்படுத்துவது, இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் என பல்வேறு ஆலோசனைகள் நடத்தினர். புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கோவிலானூர் மணிகண்டன் தலைமை தாங்கினார்,மாவட்ட பார்வையாளர் கலியவரதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் அக்கட்சி உறுப்பினர்கள் ஓபிசி மாநில தலைவர் சாய் சுரேஷ்,தேசிய பொதுக்குழு உறுப்பினர் செல்வ பாண்டியன் மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி கிருஷ்ணமூர்த்தி மாவட்ட துணை தலைவரும் ஒன்றிய கவுன்சிலர்மான செந்தில்குமார் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் நகர அமைப்பாளர் செல்வராஜ் மாவட்ட விவசாய அணி செந்தில்குமார் மற்றும் 300க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment