ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் !!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 May 2022

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் !!!


கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம் வட தலைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மற்றும் மறுகட்டமைப்பு பெற்றோர்கள் கூட்டம் பள்ளியின் தலைமையாசிரியர் சா.துறைமணிராஜன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.


இக்கூட்டத்தில் ஆசிரியர் பயிற்றுநர் ஆர். சக்திவேல் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக வட தலைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.செந்தில் முருகன் ஒன்றிய குழு உறுப்பினர் எஸ் .ஜெயமாலா செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினர்களின் பொறுப்பும் கடமைகளையும் எடுத்துரைத்து பெற்றோர்கள் மத்தியில் வி.ரமேஷ் ச.கிருஷ்ணவேணி அ.சிவக்குமாரி ஆகியோர்களை உறுப்பினர்களாக தேர்வு செய்து பின்பு தலைவர் தேர்வு செய்தனர்.



மேலும் இந்நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பள்ளியின் உதவி ஆசிரியர் வசந்தா அங்கன்வாடி அமைப்பாளர் ராணி ஆகியோர் நன்றி கூறினார்


No comments:

Post a Comment

*/