அருள்மிகு ராதா -ருக்மணி சமேத அருள்மிகு ராதாகிருஷ்ண சுவாமி திருக்கோயில் திருக்கல்யாண உற்சவ விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 May 2022

அருள்மிகு ராதா -ருக்மணி சமேத அருள்மிகு ராதாகிருஷ்ண சுவாமி திருக்கோயில் திருக்கல்யாண உற்சவ விழா


விருத்தாசலம் கம்பர்தெரு அருள்மிகு ராதா -ருக்கு மணி சமேத அருள்மிகு ராதாகிருஷ்ண சுவாமி திருக்கல்யான உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட கம்பர் தெருவில் உள்ள அருள்மிகு ராதா -ருக்மணி சமேத அருள்மிகு ராதாகிருஷ்ண சுவாமி திருக்கோயில் திருக்கல்யாண உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ராதா - ருக்மணி சமேத அருள்மிகு ராதாகிருஷ்ண சுவாமி காட்சியளிக்க யாக வேள்வி பூஜை நடைபெற்று, அருள்மிகு ராதா - ருக்மணி சமேத அருள்மிகு ராதாகிருஷ்ண சுவாமி காப்புக்கட்டுதல் நடைபெற்று, மேளதாளத்துடன் மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது.


அதனைத் தொடர்ந்து, பூ பந்து எறிதல்  மற்றும் தேங்காய் உருட்டல் நிகழ்ச்சி நடைபெற்று. சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இத்திருக்கல்யாண உற்சவ விழாவை திரளான பக்தர்கள் கண்டு களித்து சாமி தரிசனம் செய்தனர்.அதனைத் தொடர்ந்து இரவு சாமி வாணவேடிக்கையுடன் மேளதாளத்துடன் பாகவத பஜனைகளுடன் கருடவாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

No comments:

Post a Comment

*/