கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. சக்திகணேசன் அறிவுரையின்படி கடலூர் மாவட்டத்தில் காவல் அதிகாரிகள் கஞ்சா, போதை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் வாகன விபத்தை தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
23.5.2022 ம் தேதி இரவு ரோந்து பணி மேற்கொண்ட குறிஞ்சிப்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரசன்னா அய்யந்தூர் கிராமம் கோவில் திருவிழாவில் இரவு நாடகம் நடைபெற்றது. நாடக மேடையில் அப்பகுதி கிராம பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளி மாணவர்கள் பள்ளியில் ஒழுக்கமாக நடந்து கொள்வது பற்றியும், சாதி மோதலில் ஈடுபட கூடாது என்றும் அதனால் வாழ்க்கையின் நிலைமையே மாறிவிடும் எனவும், மாணவர்கள் பேருந்து படியில் பயணம் கூடாது எனவும், சட்டவிரோத செயல்கள், சமூக விரோதிகள் பற்றி தகவல் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என நாடக மேடையை விழிப்புணர்வு மேடையாக பயன்படுத்தி கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

No comments:
Post a Comment