கடலூரில் நவீன முறையில் பனை வெல்லம் மற்றும் கற்கண்டு தயாரிக்கும் பயிற்சி மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 May 2022

கடலூரில் நவீன முறையில் பனை வெல்லம் மற்றும் கற்கண்டு தயாரிக்கும் பயிற்சி மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா.

 

கடலூரில் நவீன முறையில் பனை வெல்லம் மற்றும் கற்கண்டு தயாரிக்கும் பயிற்சி மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா.


கடலூரில் தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம் தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் கடலூர் கிளையின் வாயிலாக நவீன முறையில் பனை வெல்லம் மற்றும் கற்கண்டு தயாரிக்கும் பயிற்சி மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா கடலூர் தேவனாம்பட்டினம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி வாரிய வளாகத்தில் நடைபெற்றது. 


இந்த நிகழ்ச்சியில்கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கடலூர்  மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா குத்துவிளக்கு ஏற்றி பயனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கும் விழா பேருரை ஆற்றினார். துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக கடலூர் நகர செயலாளர் கே. எஸ். ராஜா,வேளாண்மை துறை இணை இயக்குனர் ரவிச்சந்திரன் ,திருச்சி கதர் கிராம தொழில்கள் துணை இயக்குனர் பாலகுமாரன் ,கடலூர் கதர் கிராமத் தொழில் உதவி இயக்குனர் தேவ மனோகரி, கடலூர் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் அருண் ,ஆகியோர் கலந்து கொண்டனர்.


முன்னதாக தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணைய மேலாண்மை இயக்குனர் கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். விழா இறுதியில் கடலூர் மண்டல பொருள் பயிற்சி நிலைய முதல்வர் கணபதி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/