வேப்பூர் அருகே தீயில் எரிந்து நாசமான இருசக்கர வாகனங்கள் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 May 2022

வேப்பூர் அருகே தீயில் எரிந்து நாசமான இருசக்கர வாகனங்கள்


கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டு ரோட்டில் ஹோண்டா இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் ஷோரும் தீடீரென தீப்பற்றி எரிந்ததால் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்தது சேதம்.


கடலூர் மாவட்டம், வேப்பூர் கூட்டு ரோட்டில் விருத்தாசலத்தை சேர்ந்த செந்தில் குமார் என்பர் இரண்டு சக்கர வாகனம் விற்பனை செய்யும் ஷோரும் கடந்த 2015 ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.


நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர் இன்று காலை ஒன்பது மணிக்கு கடையில் இருந்து கரும்புகை வருவதை கண்ட பொது மக்கள் வேப்பூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.


தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

 

மேலும் தீ கட்டுக்கடங்காமல் போனதால் விருத்தாசலம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.வேப்பூர் மற்றும் விருத்தாசலம் தீயணைப்பு வீரர்கள் சேர்ந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  


இந்த தீ விபத்தில் 26 புதிய இரு சக்கர வாகனம், சர்வீஸ் செய்ய வந்த பழைய வாகனம் 6 மற்றும் சுமார் 3 லட்சம் மதிப்புள்ள இரண்டு சக்கர வாகன உதிரி பாகங்கள் தீயில் எரிந்தது கருகியது இப்பகுதியில் நிகழவிருந்த பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது

No comments:

Post a Comment

*/