கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம் திருநாரையூர் கிராமத்தில் காட்டுமன்னார்கோயில் தீயணைப்பு துறை சார்பில் அரக்கோணம் பேரிடர் மேலாண்மை NDRF டீம் மற்றும் காட்டுமன்னார்கோயில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் தலைமையில் பணியாளர்கள் இணைந்து பேரிடர் காலங்களில் எப்படி தற்காத்துக் கொள்வது மற்றும் மீட்பு பணி செய்யும் போது என்னென்ன செய்ய வேண்டியவை பேரிடர் காலங்களில் முன்னேற்பாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்வது போன்ற நிகழ்ச்சிகள் செய்து காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் வேணி கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகரன் வருவாய் ஆய்வாளர் காட்டுமன்னார்கோவில் ரெட்கிராஸ் சங்கம் சார்பில் சதீஷ்குமார் அஜ்மல்கான் ராமலிங்கம் ஞான சபாபதி கேலக்ஸி ரோட்டரி சங்கம் சார்பில் தலைவர் ரூபி பாஸ்கர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
செய்தியாளர் :கே, பாலமுருகன்

No comments:
Post a Comment