கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலை அருகில் இலங்கையில் உள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி விடுதலை சிறுத்தை கட்சியின் முற்போக்கு மாணவர் கழகத்தின் மாநில துணைச் செயலாளர் நீதிவள்ளல் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்,விடுதலை சிறுத்தை கட்சியின் சமூக ஊடக மையத்தின் மாநில துணைச் செயலாளர் ராஜ்குமார்,ஆவண மைய மாவட்ட அமைப்பாளர் தன்ராஜ் மற்றும் ஏராளமானோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் பிரபாகரன் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்,நிகழ்ச்சியில் நகர செயலாளர் முருகன் ஒன்றிய பொருளாளர் சக்திவேல் ஒன்றிய துணைச் செயலாளர் தென்றல் நகர பொருளாளர் தனசேகரன் மேற்கு நகர செயலாளர் முருகன் நகர துணை செயலாளர் வீரமணி மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் அய்யாத்துரை வீரமணி ஸ்ரீதர் ரமணா பரணி அர்ஜுனன் ஆகியோர் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment