புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு ஊராட்சியில் இயங்கிவரும் ஒருங்கிணைந்த வேளாண்மை விற்பனை மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு ரூபாய் 29.58 லட்சம் மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய சுழல் கலப்பையை வழங்கினார் !!!
கடலூர் மாவட்டம், மேல் புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட வண்டுராயன்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் தமிழக அரசின் ஒருங்கிணைந்த வேளாண்மை மற்றும் விற்பனை மையத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் நெல் விதை சுத்திகரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதையும் நெல் விதை குவியலில் இருந்து பதுரை பிரித்தெடுக்கும் சுத்திகரிப்பு இயந்திரத்தையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்பு வேளாண் கிடங்கில் உள்ள குறுவை பருவத்திற்கு தேவையான நெல் விதை உயிர் உரங்கள் பயிறு வகைகள் மற்றும் இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார் .
மேலும் கடலூர் மாவட்டத்திற்கு தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 79 . வேளாண் இயந்திரங்கள் ரூபா 29.58 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படுகிறது
இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு ரூபா 1.38.000 மதிப்பீட்டில் ரூபா 42 ஆயிரம் மானியத்துடன் கூடிய சூழல் கலப்பையையும் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இரண்டு விவசாயிகளுக்கு தலா ரூபா 2.985/.மதிப்பீட்டில் தலா ரூபாய் 2.118/.மானியத்துடன் கூடிய வேளாண் உபகரணங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கி. பாலசுப்பிரமணியம் அவர்கள் விவசாயிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு. செல்லப்பாண்டி வேளாண்மை இணை இயக்குனர் திரு. ரவிச்சந்திரன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு. ஜெயக்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்

No comments:
Post a Comment