விருத்தாசலத்தில் அரசு உயர்நிலை பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி கட்டிடம் கட்டித்தர கோரி சாலை மறியல். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 May 2022

விருத்தாசலத்தில் அரசு உயர்நிலை பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி கட்டிடம் கட்டித்தர கோரி சாலை மறியல்.


கடலூர் மாவட்டம்,விருத்தாசலம் அடுத்த கோ. ஆதனூர் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலை பள்ளி  மாணவ மாணவிகள் பள்ளி கட்டிடம் கட்டித்தர கோரி சாலை மறியல்.


ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 700 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கட்டிடம் இருப்பதாகவும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு பழைய ஓட்டு கட்டிடத்தில் படிப்பதாகவும் ஓடு இடிந்து விழும் நிலையிலும் மழைகாலத்தில் ஒழுங்கும் நிலையிலும் உள்ளதால் மரத்தடியில் அமர்ந்து படித்து வருவதாகவும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு புதிய கட்டிடம் கட்டித் தரக்கோரி கோ. ஆதனூர் அரசு உயர்நிலை பள்ளி மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறை துணை கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் பேச்சுவார்த்தை நடத்தி சாலைமறியலை மாணவர்கள் கைவிட்டனர்.

செய்தியாளர்; இரா.சீனிவாசன்.

No comments:

Post a Comment

*/