காட்டுமன்னார்கோயில் அரசு பேருந்து அதிக அளவில் இயக்காததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தான பயணம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 May 2022

காட்டுமன்னார்கோயில் அரசு பேருந்து அதிக அளவில் இயக்காததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தான பயணம்


காட்டுமன்னார்கோயில் அரசு பேருந்து அதிக அளவில் இயக்காததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தான பயணம்


கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் பள்ளி கல்லூரிகள் அதிக அளவில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் காட்டுமன்னார்கோயில் டூ ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இயங்கி வந்த அரசு பேருந்துகள் சரிவர இயங்காததால் தனியார் பேருந்துகளில் பள்ளி மாணவர்களும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய விவசாயிகள் அதிக அளவில் செல்வதால் பேருந்து படிகட்டில் பள்ளி மாணவர்கள் தொங்கும் நிலைமை உருவாகி உள்ளது.


குறிப்பாக காட்டுமன்னார்கோயில் பகுதியில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் சென்று வந்த தடம் எண் 257 மற்றும் 45 உள்ளிட்ட பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள.


தொடர்ந்து இது சம்பந்தமாக அரசு அதிகாரிகள் பேருந்து பணிமனை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள் பெற்றோர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

செய்தியாளர்: கே. பாலமுருகன்

No comments:

Post a Comment

*/