இடிந்து விழும் நிலையில் நூலக கட்டிடம் உயிர்பலி வாங்கும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா பொதுமக்கள் எதிர்பார்ப்பு !!!
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம் ரெட்டியூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நூலகக் கட்டிடம் அமைந்துள்ளது இது கடந்த 10 ஆண்டு காலமாக சுவர்கள் பெயர்ந்து பழுதாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது அரசு பழைய கட்டிடங்களை அகற்றுவதற்கு உத்தரவுகளை போட்டுள்ளது இருந்தும் இந்த கட்டிட இடிக்கப்படாமல் உள்ளது.
மேலும் பள்ளி வளாகம் என்பதால் அங்கு மாணவ மாணவிகள் மற்றும் பள்ளி விட்ட பின்பு பொதுமக்கள் அமர்ந்து விளையாடுவது உண்டு அப்போது இடிந்து உயிர்பலி ஏற்படுவதற்கு முன் உடனடியாக பழைய கட்டடங்களை இடித்து விட்டு புதிய நூலகக் கட்டிடம் கட்டி கொடுக்க அப்பகுதி சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்
செய்தியாளர்; கே, பாலமுருகன்

No comments:
Post a Comment