மத்திய அரசின் அமைப்புசாரா நல வாரியத்திற்கு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 May 2022

மத்திய அரசின் அமைப்புசாரா நல வாரியத்திற்கு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மத்திய அரசின் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. 


இம்முகாமில் அமைப்புசாரா தொழிலாளர்கள் கட்டுமான தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு தொழிலாளர்களும் பதிவு செய்தனர் உடனுக்கு உடன் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்பட்டது. இம்முகாமிற்க்கு கடலூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பில் திருமதி க.தனஞ்செயம்  தொழிலாளர் உதவி ஆய்வாளர் சிதம்பரம், திருமதி ஆ.கமலா கார்த்தீஸ்வரி   உதவியாளர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் சிதம்பரம், ஆகியோர் தலைமை வகித்தனர் இவ்விழாவை சேத்தியாதோப்பு பேரூராட்சி மன்ற தலைவர் தங்க. குலோத்துங்கன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக அரிமா சங்க வட்டார தலைவர் மணிமாறன்  அரிமா சங்க தலைவர் தங்க.செங்குட்டுவன் டாக்டர் சிவனேசன் டாக்டர் பரணிதரன் வணிகர் சங்க பக்கிரிசாமி  அரிமா அன்பழகன் தில்லை தாமரைச்செல்வன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர் அனைவரையும் தமிழ்நாடு திருநீலகண்டர் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் ஏ.கே.ராஜா வரவேற்றார்.


இம்முகாமில் தொழிலாளர்கள்  நன்மைகள் குறித்து சுசீலா குணவதி மீனாம்பிகா  ஆகியோர் எடுத்துக் கூறினர்   இம்முகாமில் 104 தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அட்டை இலவசமாக வழங்கப்பட்டது ஒவ்வொரு உறுப்பினருக்கும் இரண்டு லட்சம் மருத்துவ காப்பீடு இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது இம்முகாமில் 200 க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்  தமிழ்நாடு திருநீலகண்டர் தொழிற்சங்கம் சார்பில் அனைவருக்கும் ஆகாஷ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

*/