விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குழந்தை திருமணம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 May 2022

விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குழந்தை திருமணம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு

விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு மற்றும் கையெழுத்து இயக்கம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பில் அட்சய திருதியை முன்னிட்டு குழந்தை திருமணம் நடைபெறுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு மற்றும் கையெழுத்து இயக்கத்தை கோட்டாட்சியர் ராம்குமார் தொடங்கி வைத்து துண்டு பிரசுரம் வழங்கினார்கள்.


இதில் வட்டாட்சியர் தனபதி, வருவாய் ஆய்வாளர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள் மகேஷ் மற்றும் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/