கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்திற்கு உட்பட்ட தவர்த்தாம்பட்டு ஊராட்சியில் சுமார் மூன்று வருட காலமாக சவுடு கலந்து தண்ணீர் மட்டுமே நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய்களில் வருகிறது
கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளது பெயரளவிலேயே செயல்பாட்டில் உள்ளது இதுவரை ஒரு நீர் சொட்டு கூட இதன் மூலம் வந்ததில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குடிப்பதற்கு உகந்தது அல்ல இதனை வீட்டு உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறதுந நல்ல குடிதண்ணீருக்கு ஒரு மைல் தூரம் சென்றதுதான் குடிநீர் எடுத்து வருகின்றனர்
இதுகுறித்து ஏற்கனவே குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலத்திற்கும் மற்றும் சிதம்பரம் தாலுகா அலுவலகத்திற்கும் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் இதுவரை எந்தப் பயனும் இல்லை என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விரைந்து அரசு கவனத்தில் எடுத்து எங்களுக்கு நல்ல குடிநீர் வழங்குமாறு மிகத் தாழ்மையுடன் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:
Post a Comment