பா.கொத்தனூர் கிராமத்தில் வேளாண்மை அலுவலர்கள் ஆய்வு !!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 May 2022

பா.கொத்தனூர் கிராமத்தில் வேளாண்மை அலுவலர்கள் ஆய்வு !!!!


பா.கொத்தனூர் கிராமத்தில் வேளாண்மை அலுவலர்கள் ஆய்வு !!!



கடலூர் மாவட்டம்,நல்லூர் ஒன்றியம், வேப்பூர் அருகிலுள்ள பா.கொத்தனூர் ஊராட்சி, கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்ந்தெடுக்கபட்டுள்ளது.


அதனை தொடர்ந்து நல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் ராஜசேகர், வேளாண்மை அலுவலர் சிவகாமசுந்தரி, உதவி வேளாண்மை அலுவலர் ரம்யா ஆகியோர் இக்கிராமத்தில் மே 1- ந் தேதி பா.கொத்தனூர் கிராமத்தில் நடைபெற்ற. கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு கிராமத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் முனியன் துணை தலைவர் வசந்தா மற்றும் கிராம மக்களுடன் ஆலோசனை செய்தனர்.


பின்னர் விவசாயிகள் மத்தியில் உதவி இயக்குநர் ராஜசேகர் பேசும் போது வேளாண்மை துறையில் செயல்படுத்தபடும் திட்டங்களில் 70 சதவிகித திட்டங்கள் பா.கொத்தனூர் ஊராட்சிக்கு ஒதுக்கி செயல்படுத்தபடும் என்றும், கிசான் கிரிடிட் கார்டு திட்டத்திற்கான விண்ணப்பங்களை பட்டா யார் பெயரில் உள்ளதோ அவர்களுக்கு அதன் சலுகைகள் வழக்கபடும் என்றும், கிசான் திட்டத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் முதல், 3 லட்சம் வரை கடன் வழங்க பரிந்துரைக்கபடும் என்றும் கூறினார் முன்னதாக அனைவரையும் ஊராட்சி செயலாளர் ஞானவேல் வரவேற்று நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

*/