காட்டுமன்னார்கோயில் அருகே இருபிரிவு இளைஞர்களிடையே மோதல் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 May 2022

காட்டுமன்னார்கோயில் அருகே இருபிரிவு இளைஞர்களிடையே மோதல்

 

காட்டுமன்னார்கோயில் அருகே இருபிரிவு இளைஞர்களிடையே மோதல்!!!


கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ளது பழஞ்சநல்லூர் கிராமம்.இக்கிராமத்தில் பல்வேறு சமூக மக்கள் வசித்து வருகின்றனர்.


இதில் கீழதெருவை சேர்ந்த  செல்வராசு என்பவரின் மகன் ஜெயபாரதி, குணசேகரன் மகன் குணால்,இளையபெருமாள் மகன் அபிஷேக்,அவுரவம் மகன் கோகுல் இந்த நான்கு இளைஞர்களும் பழஞ்சநல்லூர் மணவெளி தெருவிற்கு அருகில் உள்ள சாலை ஓரத்தில் உள்ள பனை மரத்தில் பனை நொங்கு வெட்டி சாப்பிட்டு உள்ளனர் .


இதை பார்த்த வேறுபிரிவு சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் அவர்களை அடித்து கட்டை கழியால் தாக்கியுள்ளனர் இதனால் படுகாயத்துடன் நான்கு இளைஞர்களும் காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தகவலறிந்த விடுதலை சிறுத்தை கட்சியின் தொகுதி துணை செயலாளர் சக்திவேல் ராவணன் ஒன்றிய துணை செயலாளர் மெய் இளந்தமிழன் பிரபு வழக்கறிஞர் ராஜா மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட நபர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார் பின்பு காட்டுமன்னார்கோயில் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்.


மருத்துவ மனைக்கு வந்து பாதிக்கப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தி புகார் மனு வாங்கி கொண்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்து உள்ளனர் 


இச்சம்பவம் கிராமமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திவயுள்ளது. இந்த நிலையில் படுகாயமடைந்த நான்கு பேரும் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

*/