கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி புள்ளியியல் துறையில் புள்ளியியலில் பங்கு என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 May 2022

கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி புள்ளியியல் துறையில் புள்ளியியலில் பங்கு என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு

கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி புள்ளியியல் துறையில் புள்ளியியலில் பங்கு என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.


இவ்விழாவை கல்லூரி முதல்வர் முனைவர் சி ஜோதிவெங்கடேஷ்வரன் தலைமை ஏற்று விழா துவக்கவுரை நிகழ்த்தி புள்ளியியலின் துறைத்தலைவர் முனைவர் தனித்தன்மையை பற்றி எடுத்துரைத்தார். இ. சுசிகணேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்வில் புதுவை மகாத்மாகாந்தி மருத்துவமனை சமூக நலத்துறையை சேர்ந்த முனைவர் ஆ. லோகேஷ்மாரன் இணைப்பெராசிரியர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்தினார். 


முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு முனைவர். சோ. ஏகாம்பரம் நினைவு பரிசு வழங்கினார் விழாவின் இறுதியில் முனைவர் நா. பரஞ்ஜோதி நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் புள்ளியியல்துறை பேராசிரியர்கள் முனைவர் மோகனசுந்தரி, முனைவர் ச விஜய் அமிர்தராஜ், முனைவர் த. ரமணி மற்றும் முனைவர் ச. ஜோதிமாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்.


இவ்விழாவில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயனடைந்தனர். மேலும் பிற துறை பேராசிரியர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். புள்ளியியல் மாணவ/மாணவிகள் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.

No comments:

Post a Comment

*/