அடரி துணை மின் நிலைய அலுவலகத்தில் பணியில் இருந்த ஊழியர் நெஞ்சு வலியால் இறந்தார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 May 2022

அடரி துணை மின் நிலைய அலுவலகத்தில் பணியில் இருந்த ஊழியர் நெஞ்சு வலியால் இறந்தார்.


அடரி துணை மின் நிலைய  அலுவலகத்தில் பணியில் இருந்த   ஊழியர் நெஞ்சு வலியால் இறந்தார்.


கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள அடரி கிராமத்தில்  தமிழ்நாடு  மின்சார வாரிய. துணை  மின் நிலையம்  செயல்படுகிறது 


இங்கு வேப்பூர் அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்த பச்சமுத்து மகன் ராஜவேல், (வயது 58) என்பவர்  சிறுபாக்கம் அடுத்த அடரி துணை மின் நிலையத்தில் கட்டுப்பாடு பிரிவு ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்தார்.


இந்நிலையில், மே 24 ந் தேதி இரவு  பணியிலிருந்த போது, இரவு 11:30 மணியளவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு அதே இடத்தில் இறந்துவிட்டார் 


இது குறித்து  தகவலறிந்து வந்த சிறுபாக்கம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார், அவரது பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு  விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் 


 இது குறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து மேலும்  விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/