விருத்தாசலத்தில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் - தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பங்கேற்பு!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 May 2022

விருத்தாசலத்தில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் - தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பங்கேற்பு!!!


விருத்தாசலம் மேற்கு மாவட்டம் நகர திமுக மற்றும் திமுக இளைஞரணி சார்பில் தமிழக முதலமைச்சர் தலைமையில் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் தி.மு.க. கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. தி.மு.க. கூட்டணி ஒட்டுமொத்தமாக 159 இடங்களையும் தி.மு.க. மட்டும் 133. இடங்களையும் கைப்பற்றின.


மே 07.2021ஆம் தேதியன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. திமுக அரசு பதவியேற்று  ஓராண்டு நிறைவு பெற்றதை தமிழகம் முழுவதும்  திமுகவினர் நூற்றாண்டு போற்றும் ஓராண்டு சாதனை என்ற தலைப்பில் சிறப்பு பொதுக்கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள் என கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.


திமுக கடலூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் விருத்தாசலம் நகர வானொலி இதழில் திமுக தலைவர் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பொதுமக்களுக்கு ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் தமிழக தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் சாதனை பொதுக்கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் பேசிய  அமைச்சர்  கணேசன் அவர்கள் தமிழகத்தில் பெண்களுக்கு அரசு பேருந்தில் பயணம் செய்வதற்கு இலவசமாக பயணம், இல்லம் தேடி மருத்துவ முகாம், முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு, கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் "அன்னை தமிழ் அர்ச்சனை திட்டம்", அர்ச்சகர், ஓதுவார் மற்றும் இசை கற்போர் பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை, உங்கள் தொகுதியில் முதல்வர், பட்டதாரி இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாம்கள், 


நெகிழி பயன்பாட்டை குறைக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன என பேசினார். மேலும் முதல்வர் பதவியேற்ற காலத்தில் தமிழகத்தில் கொரொனாவால்  பாதிக்கபட்ட பொதுமக்கள் ஏராளமானோர் இருந்தனர். ஆனால் தமிழகத்தில் தற்போது கொரோனா இல்லை என்று சாதனை படைத்தவர் நம் முதல்வர், எண்ணற்ற திட்டங்களை தமிழக மக்களுக்கு வழங்கியவர்  தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்று பெருமையுடன் கூட்டத்தில் பேசினார். மேலும் முடிந்த 1 ஆண்டு மட்டுமல்ல, தொடரும் 4 ஆண்டுகளும் மக்களுக்கு பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சாதனை திட்டங்கள் தொடரும் என பேசினார்.


இதனைத் தொடர்ந்து நகர செயலாளர் தண்டபாணி வரவேற்புரை நிகழ்த்தினார், மாவட்ட துணை செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி பழனிச்சாமி, மாவட்ட ஆதிதிராவிடர் அமைப்பாளர் ராமு, மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் அன்சார் அலி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர் 


கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில மாணவரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்.பி.எழிலரசன் கலந்துகொண்டு பேசுகையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட வேலைவாய்ப்பு முகாம் மூலம் 75 ஆயிரம் சதவீத பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் மேலும் 100 சதவீத பட்டதாரிகளுக்கு  வேலை வாய்ப்பு வழங்கும் நிகழ்வு விரைவில் நடைபெறும் எனவும் பேசினார்.


பாரதிய ஜனதா கட்சியினர் எங்கு போனாலும் மக்களிடம் நாகரிகம் இல்லாத வார்த்தைகளை பேசி வருகின்றனர், இவர்கள்தான்  மக்களின் மனதை புரிந்து கொள்பவர்கள் என தற்பெருமை பேசி வருகின்றனர், ஆனால் தமிழக முதலமைச்சர் கடந்த 50 ஆண்டுகளாக மக்களின் வாழ்கையை புரிந்து கொண்டு தனது வாழ்வை அர்ப்பணித்து  வருகிறார்,


தமிழகத்தில் எங்கு போனாலும் சாதி என்று மதம் என்று கொள்கை பரப்பி ஒரு சில பேர் பேசி வருகிறார்கள் ஆனால் வ உ சி சிதம்பரனாருக்கு மணிமண்டபம் மற்றும் அயோத்திதாச பண்டிதர் அவர்களுக்கும் மணிமண்டபம் எண்ணற்ற தலைவர்களுக்கெல்லாம் நினைவு நாளில் பிறந்த நாளில் சிறப்பு விழாவாக நடக்க ஏற்பாடு செய்தவர் நம் முதல்வர் என பேசினார்.  


இந்நிகழ்வில் மாநில தலைமை கழக பேச்சாளர் நெல்லை மணி, விருத்தாசலம் நகர மன்ற தலைவர் மருத்துவர் சங்கவி முருகதாஸ், தெற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன் வடக்கு ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தக்ஷிணாமூர்த்தி நகரமன்ற உறுப்பினர்கள் வயலூர் கிருஷ்ணமூர்த்தி. வெங்கடேசன். முத்துக்குமரன். சுந்தரி. தீபா மாரிமுத்து


அருள்மணி. வசந்தி. ராசாத்தி. அறிவழகி. கரி முனிஷா. பக்கிரிசாமி. ஆட்டோ பாண்டியன். உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தை வெகு விமர்சையாக நடத்தினார்கள். இறுதியில் நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேசன் நன்றி உரை கூறினார்

No comments:

Post a Comment

*/