கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ராஜகோபால சுவாமி கோவில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொருநாளும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சுவாமி வீதிஉலா நடைபெற்று வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான ஒன்பதாம் நாள் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக, கோயில் முன்பு மா, பலா, வாழை, இளநீர் உள்ளிட்ட தோரணங்கள் கட்டப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் அருள்மிகு ருக்மணி சத்யபாமா சமேத அருள்மிகு ராஜகோபால சுவாமி காட்சி அளிக்க சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனையுடன் அப்பகுதி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்ற திருத்தேரானது கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் கோவிலைச் சுற்றி வலம் வந்து நின்றது. பின்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஸ்ரீ ராஜகோபால டிரஸ்ட் ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments:
Post a Comment