கடலூர் மாவட்டம்,சேத்தியாத்தோப்பில் கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில் மே தின சிறப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் புவனகிரி அதிமுக எம்எல்ஏவுமான அருண்மொழிதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
முன்னதாக வடக்கு மெயின் ரோட்டில் கட்சி கொடியேற்றி, கழக கல்வெட்டை திறந்து வைத்தார்.பின்னர் நடைபெற்ற மே தின சிறப்பு பொதுக் கூட்டத்தில்சிவி சண்முகம் தம் சொந்த மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு கூட முன்னுரிமை தராமல் கடலூர் மாவட்டத்தை தன் மாவட்டம் போல நினைத்து முன்னுரிமை கொடுத்து இங்கு உரையாற்ற வந்துள்ளார் என்று தலைமை வகித்து பேசிய புவனகிரிஎம்எல்ஏ அருண்மொழிதேவன் குறிப்பிட்டார்.
இதனையடுத்து சிறப்புரையாற்றிய சிவி. சண்முகம் பேசும்போது பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக அரசு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளது. அவர்கள் சொன்னதை எதையும் செய்யவில்லை. தற்போது தமிழகத்தில் அதிகரித்துள்ள பாலியல் குற்றங்கள், தொடர் மின்வெட்டு இவைகளை தடுக்க இந்த அரசு தவறிவிட்டது. அனைத்து திட்டங்களிலும் அதிமுக அரசின் திட்டங்களை காப்பியடித்து திமுக அரசு செயல்படுத்துகிறது.
தற்போது ஆட்சியில் இல்லாமல் போனாலும் இந்த ஆட்சியை விட முன்பிருந்த எடப்பாடி ஆட்சியே பரவாயில்லை என்று மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.திமுக அரசு காவல்துறையை வைத்து பலரை மிரட்டி காரியம் சாதிக்க பார்க்கிறது ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் காவல்துறையினர் சர்வ சுதந்திரமாக அவர்களின் பணிகளை செய்ய அனுமதிக்கப்பட்டனர் எவ்விதமான குறுக்கீடுகளும் இல்லை யாரையும் பயமுறுத்தவும் இல்லை. மேலும் பேசும்போது
கடலூர் மாவட்டத்திற்கு 15க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை கடந்த அதிமுக அரசு தந்துள்ளது. அதனால் மாவட்டத்தின் நீர் ஆதாரம் உயர்ந்துள்ளது.இந்த மாவட்டத்திற்கு தற்போது இரண்டு அமைச்சர்கள் கிடைத்துள்ளார் இவர்களால் எவ்விதமான புண்ணியமும் இல்லை மாவட்டத்தில் வளர்ச்சி சுத்தமாக முடங்கிப் போயுள்ளது என்று குற்றச்சாட்டையும் வைத்தார் .
இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் எம்எல்ஏ கே.ஏ பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ கலைச்செல்வன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன் , கானூர் பாலசுந்தரம், மற்றும் நகர ஒன்றிய மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் சேத்தியாத்தோப்பு நகர செயலாளர் எஸ் ஆர் மணிகண்டன் நன்றி உரையாற்றினார்.



No comments:
Post a Comment