வடலூர் அடுத்த மேட்டுகுப்பம் அரசு உயர்நிலைபள்ளியில் போஸ்கோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த மேட்டுக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு போஸ்கோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கு. மேட்டுக்குப்பம் அரசு உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் வீ. தமிழரசி அவர்கள் வரவேற்புரை வழங்க சிறப்பு அழைப்பாளராக விடியல் சமூக சேவை அமைப்பின் நிறுவனர் புஷ்ப. சவரிராஜன் அவர்கள் கலந்து கொண்டார்.
நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் k.விஷ்ணுபிரியா அவர்கள் பள்ளி மாணவிகளுக்கு போஸ்கோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்நிகழ்வில் மாணவிகளுக்கு குழந்தை திருமண தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் காவலன் செயலி பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேட்டுக்குப்பம் அரசு உயர்நிலை பள்ளியில் உதவி தலைமை ஆசிரியை கா.சுபா நன்றியுரையை வழங்கினார். நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் M.பேபி மற்றும் ஆசிரியர்கள் பலர் உடனிருந்தனர்


No comments:
Post a Comment