தீவிபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நலன் உதவி!!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 May 2022

தீவிபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நலன் உதவி!!!!

சோழத்தரம் அருகே வீடு தீ விபத்து எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமுட்டம் ஒன்றியம் வட்டத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொலை யானம் கிராமத்தில் வியாகுல மேரி வயது 55 என்பவரின் வீடு கடந்த வாரம் தீப்பிடித்து சாம்பலானது தகவல் அறிந்த காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் கிராமத்திற்கு நேரில் சென்று வியாக்குல மேரியை சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவிகள் மற்றும் அரசி மளிகை பொருட்கள் பாய் மற்றும் துணிமணிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும் வீடு உடனடியாக கட்டுவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார்.


இந் நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி துணைச்செயலாளர் வெற்றிவேந்தன் கஸ்பா பாலா வானமாதேவி ராஜா ஆனந்தமணி ரட்சகர் மணிகண்டன் பழனிச்சாமி கில்பர்ட் ராஜ் வானமாதேவி சம்பத் மணிகண்டன் சண்முகம் ஆகியோர்கள் உடனிருந்தனர்


செய்தியாளர்; கே, பாலமுருகன் 

No comments:

Post a Comment

*/