கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் சுவாமி சிலை அருகில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளன் விடுதலையை செய்ததை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி பொதுச் செயலாளர் அரவிந்த் மணிரத்தனம் தலைமை தாங்கினார்.
இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள் நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமொழி மாவட்ட பொதுச்செயலாளர் சானு பாய் அண்ணாதுரை மாவட்ட மகளிர்அணி செயலாளர் கரோலின் அண்ணாதுரை வட்டார தலைவர்கள் மேற்கு சங்கர் கிழக்கு பாபு ராஜன் நகர செயலாளர் அன்வர் குமராட்சி காங்கிரஸ் கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர இளைஞரணி கர் மாணவர் அணியினர் மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினார்கள் மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க காட்டுமன்னார்கோயில் காவல்துறையினர் சார்பில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
செய்தியாளர்: கே. பாலமுருகன்

No comments:
Post a Comment