கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுக்கா, சிறுபாக்கம் கிராமத்தில் ஆடு மேய்க்க சென்ற பள்ளி மாணவி ஏரியில் தவறி விழுந்து இறந்தார்.
வேப்பூர் வட்டம், சிறுபாக்கம் மாதா கோயில் தெருவை சேர்ந்த முனியன் மகள் விஜயலட்சுமி (வயது 14) என்பவர் அங்குள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறை என்பதால் மே 18 ந் தேதி தனது வீட்டிலுள்ள ஆடுகளை அக்கிராம ஏரி பகுதியில் மேய்க்க சென்றுள்ளார். மதியம் 2 மணியளவில் ஏரிக்கரையில் நடந்து ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த போது விஜயலட்சுமி கால் இடறி தவறி ஏரியில் விழுந்தவர் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார்.
அக்கம்பக்கத்தினர் பார்த்து கூச்சல் போட்டு அங்கிருந்தவர் ஏரியில் மூழ்கிய பள்ளி மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சிறுபாக்கம் போலிசார் வழக்கு பதிந்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:
Post a Comment