யுடியூபரை கண்டித்து போராட்டம்: சிதம்பரத்தில் குவிந்த சிவனடியார்கள் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 23 May 2022

யுடியூபரை கண்டித்து போராட்டம்: சிதம்பரத்தில் குவிந்த சிவனடியார்கள்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜப் பெருமானையும், தில்லைகாளியையும் அவதூறாக பேசிய யுடியூப் மைனர் விஜயை கைது செய்ய வலியுறுத்தி அனைத்து சிவனடியார்கள் ஒன்றினைப்பு குழு சார்பில் சிதம்பரத்தில் இன்று மதியம் 3.30 மணி அளவில் கண்டன போராட்டம் சிவதாமோதரன் சுவாமிகள் தலைமையில் நடைபெற்று வருகின்றது. 


இந்த போராட்டத்தில் நடராஜன் சுவாமிகள், வாதவூரடிகள் சுவாமிகள், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில செயலாளர் ஞானகுரு, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத், இந்து மக்கள் தமிழர் கட்சி ராம.ரவிக்குமார், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் ஜோதி குருவாயூரப்பன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்று உள்ளனர் முன்னதாக போராட்டத்தில் பங்கேற்க வந்துள்ள சிவனடியார்கள் 15-க்கும் மேற்பட்ட சிதம்பரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் தங்கியிருந்தனர். சிதம்பரத்தில் எங்கு பார்த்தாலும் சிவனடியார்கள் கூட்டம் அலைமோதியது. 

இன்று காலை முதலே நடராஜர் கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் குவிந்து தேவாரம், திருவாசகம் பாடி சிவதாண்டவம் ஆட்டம் ஆடி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சக்தி கணேசன், ஏடிஎஸ்பி அசோக்குமார், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

*/