புவனகிரி அடுத்து மருதூரில் ஸ்ரீ செல்லியம்மன் ஆலய தேர் திருவிழா நடைபெற உள்ளது !!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 23 May 2022

புவனகிரி அடுத்து மருதூரில் ஸ்ரீ செல்லியம்மன் ஆலய தேர் திருவிழா நடைபெற உள்ளது !!!


புவனகிரி அடுத்து மருதூரில் ஸ்ரீ செல்லியம்மன் ஆலய தேர் திருவிழா நடைபெற உள்ளது !!!


கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் வள்ளலார் அவதரித்த  திரு மருதூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ. செல்லியம்மன் ஆலய 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேர் புதுப்பிக்கப்பட்டு தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி திருவிழா நடைபெற உள்ளது.


இதனை முன்னிட்டு வரும் மே 31.ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணி அளவில் பொறையாத்தாள்அம்மன்னுக்கும் அய்யனாருக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 7.ஆம் தேதி செவ்வாய்க்கிழமை                   இரவு 8.00 மணி அளவில் குதிரை எடுத்தல் வீதி உலா காட்சியும் மறுநாள் ஜூன் 8. ந் தேதி காலை 6.00 மணி அளவில் கேடியம் வீதி உலா காட்சியும் அதனை தொடர்ந்து 7.00 மணி அளவில் கிணற்றில் இறங்கி ஸ்ரீ. செல்லி அம்மன் சாமி எடுத்தல் நிகழ்ச்சியும் மாலை 6.00மணி அளவில் ஸ்ரீ. செல்லியம்மன் அம்பாளை  அலங்கரிக்கப்பட்டு சிங்க வாகனத்தில் கரகாட்டம் மற்றும் வாணவேடிக்கையுடன் இரவு  முழுவதும்  ஸ்ரீ. செல்லியம்மன் சீரும் சிறப்புடன் வீதி உலாநிகழ்ச்சியும்


மறுநாள் ஜூன் 9.ஆம் தேதி மதியம் 12.00 மணி அளவில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த  தேரை தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி புதுப்பிக்கப்பட்டு தேரில் அம்பாள் வீதி உலாவும் தேர் வடம் பிடித்தலை தொடர்ந்து இரவு 7.00 மணியளவில் தேரிலிருந்து அருள்மிகு ஸ்ரீ. செல்லியம்மன் அம்பாளை தேரிலிருந்து கீழே  இறக்கி பக்தர்களுக்கு காட்சி அளித்து மேல முழக்கங்களுடன்  மீண்டும் ஸ்ரீ. செல்லியம்மன் அம்பாளை கிணற்றில் வைக்கும் ஆன்மீக நிகழ்ச்சி நடைபெற உள்ளன.


விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் ஸ்ரீ செல்லியம்மன் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர் தேர் திருவிழாவை காண வரும் பக்தர்கள் அனைவரும் ஸ்ரீ. செல்லியம்மன்  அருளைப் பெறுக என வருக வருக எனவரவேற்கும் இளையதலைமுறை விழாக்குழுவினர் மருதூர்.

No comments:

Post a Comment

*/