அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் உபகரணங்களை வைத்து தையலிட்ட மருத்துவர் பாதிக்கப்பட்ட நோயாளி காவல்துறையில் புகார் மனு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 May 2022

அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் உபகரணங்களை வைத்து தையலிட்ட மருத்துவர் பாதிக்கப்பட்ட நோயாளி காவல்துறையில் புகார் மனு

காட்டுமன்னார்கோயில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணின் வயிற்றில் அறுவை சிகிச்சைக்கான பொருளை வைத்த டாக்டர் மீது புகார் போலீசார் விசாரணை. 


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அடுத்த மாதர் சூடாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி வயது 36 இவர் வயிற்று வலி சம்பந்தமாக காட்டுமன்னார்கோயில் ரெட்டியார் தெருவில் இருக்கும் ஏ கே செந்தில் குமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார் அப்போது அவரை பரிசோதித்த டாக்டர் அவருக்கு கர்ப்பப்பையில் நீர்கட்டி உள்ளதாகவும் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்றும் கூறினார்கள் 



அதனடிப்படையில் கடந்த 15 .9 .2021 இரவு சுமார் 8 மணி அளவில் மேற்படி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து மேற்படி மருத்துவர் சோன்னபடி எடுக்க வேண்டிய பரிசோதனைகள் அனைத்தையும் செய்து மறு நாள் .

16. 9. 2021 அன்று இரவு சுமார் 10 மணி அளவில் அறுவை சிகிச்சை செய்ததாக தெரிகிறது 



பின்பு ஐந்து நாட்கள் உள்நோயாளியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் தொடர்ந்து வயிற்று வலி ஏற்படவே அதனால் மீண்டும் உடலை பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அப்போது வலி ஊசி போட்டு மாத்திரைகள் கொடுத்ததாக தெரிகிறது மேலும் பின்பு சரியாகி விடும் என சொல்லி மருத்துவர் அனுப்பி வைத்து உள்ளனர் மீண்டும் மீண்டும் வலி ஏதாவது ஏற்பட்டால் நீங்கள் மருத்துவமனைக்கு வந்து ஊசி போட்டுக் கொள்ளுங்கள் என்று மருத்துவர் கூறியதாக தெரிகிறது.

 

தொடர்ந்து பல மாதங்கள் கடந்த நிலையில் தொடர்ந்து வயிற்று வலி அதிகமாக இருந்து வந்தது பின்பு எனது உறவினர் ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள சஞ்சீவி தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் இடம் சிகிச்சைக்காக சேர்ந்து மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து பார்த்த பொழுது ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர் உனது வயிற்றில் கட்டுப் போடும் துணி மற்றும் இரும்புத்துண்டு நீரில் ஆகியவை இருப்பதாகவும் உடனே அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டுமென மேலும் இது இருப்பதனால் உயிருக்கு ஆபத்து இருக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் உடனடியாக இது சம்பந்தமாக காட்டுமன்னார் கோயிலில் உள்ள ஏ கே செந்தில் குமார் மருத்துவமனையில் அனுகி கேட்டபொழுது நான் சரியாகத்தான் அறுவை சிகிச்சை செய்துள்ளேன் நீ என்னை என்னை குறை கூறுவது என அசிங்கமான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சலில் ஆளாகி பாதிப்படைந்து உள்ளேன் மேலும் கவனக்குறைவால் மருத்துவர் செந்தில் குமார் அறுவை சிகிச்சை செய்து உள்ளார் எனக்கு தகுந்த நீதி கிடைக்க வேண்டும் என காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்தில் புகார் செய்து உள்ளார் இதனால் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது மேலும் மருத்துவர் செந்தில் குமார் அறுவை சிகிச்சையில் பெயர் பெற்றவர் என்றும் அறுவை சிகிச்சைக்கு ஒரு கணிசமான தொகையை பெற்றுக் கொள்வார் என அப்பகுதியில் பரப்பப்பட்டு வருகிறது



செய்தியாளர்; கே, பாலமுருகன் 

No comments:

Post a Comment

*/