கடலூர் மாவட்டம்,காட்டுமன்னார் கோயிலில் சுவாமி சகஜானந்தா குருபூஜை விழா மிகவும் சீரும் சிறப்புமாக மாநில பொதுச்செயலாளர் எம் ஜி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
மாநில ஆலோசகர் பொட்டு ராமானுஜம் பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக புரட்சிகர சோசலிச கட்சி ஆர் எஸ் பி மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி கலந்து கொண்டு சுவாமி சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்தார் இதில் பேரூராட்சி மன்ற தலைவர் கணேசமூர்த்தி முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சக்திவேல் ராவணன் ஆகியோர் கலந்து கொண்டு அனைவருக்கும் மதிய உணவு வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் சுவாமி சகஜானந்தா மக்கள்நல பேரவையின் நிறுவன தலைவர் நாகராஜன் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்திருந்தார் இதில் கேபி குமார் பாலசுந்தரம் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
செய்தியாளர்; கே , பாலமுருகன்

No comments:
Post a Comment