இந்த ஏரியின் மூலம் 44.856 ஏக்கர் நிலம் நீர் பாசன வசதி பெறுகிறது அதோடு மட்டுமல்லாமல் சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாகவும் விளங்குகிறது.
இந்த ஏரிக்கு பருவ காலங்களில் பெய்யும் மழை மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் வீராணம் ஏரி மூன்று முறை நிரம்பி வழிந்தது. இந்த தண்ணீரை வைத்து தற்போது நெற்பயிர் சாகுபடி அறுவடை முடித்து உள்ளது கடந்த சில நாட்களாக கோடை வெயில் வறுத்து எடுத்து வருவதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது தற்பொழுது நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் நீர்வரத்து குறைந்து விட்டது.
கடந்த நான்காம் தேதி ஏரிக்கு வடவாறு மூலம் 224 கன அடி நீர் வந்தது அது தற்போது 174 கன அடியாகவும் குறைந்துள்ளது.
ஏரியின் நீர்மட்டம் நாற்பத்தி 42.05 அடியாக உள்ளது சென்னை மாநகர் குடிநீருக்காக 67 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் தொடர்ந்து வீராணம் ஏரி நீர்மட்டம் குறைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
செய்தியாளர்; கே, பாலமுருகன்.

No comments:
Post a Comment