வேப்பூர் அருகே மெடிக்கலில் சிகிச்சை பெற்ற குழந்தை இறந்தது - போலீசார் விசாரணை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 May 2022

வேப்பூர் அருகே மெடிக்கலில் சிகிச்சை பெற்ற குழந்தை இறந்தது - போலீசார் விசாரணை

கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சாமிவேல் மகன் கார்த்திக் (வயது 28) இவரது பெண் குழந்தை லட்சிதா (வயது 5) இவருக்கு நேற்று மே-7 ந் தேதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரது பெற்றோர் பகல் 11:00 மணியளவில் வேப்பூர் தாரா மெடிக்கல் மற்றும் கிளினிக்கு அழைத்து சென்றனர். 


அங்கு, லட்சிதாவை பரிசோதனை செய்த டாக்டர் சத்தியசீலன், இரண்டு ஊசி போட்டு மருந்துகள் வழங்கினார்.


தொடர்ந்து, வீட்டிற்கு வந்த பின் பகல் 1:00 மணியளவில் லட்சிதாவிற்கு அவரது பெற்றோர் மாத்திரை சாப்பிட வைத்தனர். அதனை சாப்பிட்ட சில நிமிடங்களில் லட்சிதா வாந்தி எடுத்து மயக்கமடைந்தார். இதனால், பதற்றமடைந்த பெற்றோர், பகல் 1:30 மணியளவில் லட்சிதாவை தூக்கி கொண்டு வேப்பூர் தாரா மெடிக்கல் மற்றும் கிளினிக்கில் அதே டாக்டரிடம் மீண்டும் காண்பித்தனர் அப்போது, வேறு மருத்துவமனையில் காண்பித்து ஸ்கேன் செய்து சிகிச்சை பெறுமாறு கூறி அனுப்பி வைத்துள்ளார். 


பின்னர், வேப்பூர் அரசு மருத்துவமனையில் லட்சிதாவை சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் லட்சிதா இறந்து விட்டதாக கூறினார். அதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து குழந்தை இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/