கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பாலக்கரை திலீபன் சதுக்கத்தில் பெரியார் நகர்வு புத்தக சந்தை தொடக்க விழாவை விருத்தாசலம் நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் துவக்கி வைத்தார். திராவிட கழக மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன் வரவேற்புரையாற்றினார். அரங்க பன்னீர்செல்வம் மண்டல தலைவர் தலைமை வகித்தார். முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழக நகர செயலாளர் தண்டபாணி இளங்கோவன் திராவிட கழக மாவட்ட தலைவர் கருணாநிதி நகர்மன்ற உறுப்பினர் சேகர் திராவிட கழக நகர செயலாளர் இளந்திரையன் திராவிட கழக மாநில இளைஞரணி செயலாளர் சுப்பிரமணியன் திராவிட கழக நகர தலைவர் குமரேசன் ஒன்றிய செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்புரையாக திராவிட கழக பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் எழுத்தாளர் இமயம் கருத்துரை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் ஒன்றிய தலைவர் பாலமுருகன் நன்றியுரை கூறினார். இதில் நகரமன்ற உறுப்பினர்கள் அன்பழகன் பக்கிரிசாமி அன்சர்அலி முத்துக்குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment