கடலூர் மாவட்டம்,வேப்பூர் கூட்டுரோடு பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், தலைமை காவலர் சதீஷ்குமார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேப்பூர் கூட்ரோட்டில் மளிகை கடை மற்றும் பேக்கரி கடைகளில் மர்ம நபர் ஒருவர் கத்தியை வைத்து மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது
இதையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், தலைமை காவலர் சதீஷ்குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது 26 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் கத்தியை கையில் வைத்துக் கொண்டு வருவோர் போவோரை மிரட்டிக் கொண்டிருந்தார்.
போலீசார் அந்த நபரை பிடிக்க முயன்றபோது அவர் கையில் வைத்திருந்த கத்தியால் சிறப்பு உதவி ஆய்வாளரை வெட்டியுள்ளார் இதையடுத்து அங்கிருந்தவர்கள் மற்றும் போலீசார் அந்த வாலிபரை வளைத்துப் பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் இருந்து தலா 5 கிராம் அளவுள்ள மூன்று கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது
மேலும் போலிசார் விசாரணையில் , வேப்பூர் தாலுக்கா சாத்தியம் கிராமத்தைச் சார்ந்த பாண்டியன் மகன் மணிகண்டன் (வயது 26) என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலிசாரை தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்து அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த மணிகண்டன் மீது வேப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.
மணிகண்டன் மீது விருத்தாசலம் காவல் நிலையத்தில் ஏற்கனவே இரண்டு கஞ்சா வழக்குகள் உள்ளது. இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேஷ் பரிந்துரையின் பேரில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன் ஓராண்டு காலம் குண்டர் தடுப்புக் காவலில் வைக்க உத்திரவிட்டதின் பேரில் மணிகண்டன் குண்டர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டார். அதற்கான உத்திரவு நகலை கடலூர் மத்திய சிறையிலுள்ள மணிகண்டனிடம் வேப்பூர் போலிசார் வழங்கினார்கள்.

No comments:
Post a Comment