மாளிகைமேடு பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்- உராட்சி மன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்களை போலியாக போட்டு தீர்மானம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 May 2022

மாளிகைமேடு பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்- உராட்சி மன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்களை போலியாக போட்டு தீர்மானம்


உராட்சி மன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்களை போலியாக போட்டு  தீர்மானம் நிறைவேற்றும் மாளிகைமேடு பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு பஞ்சாயத்தில் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத மாளிகைமேடு ஊராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


அண்ணாகிராமம் ஒன்றிய 13வது வார்டு உறுப்பினரும் அண்ணாகிராமம் ஒன்றிய குழுத் தலைவருமான ஜான்சிராணி தென்னரசு அவர்களின் தலைமையில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பண்ருட்டி வட்ட பொது நல அமைப்பு சங்க தலைவர் தெய்வீக தாஸ் முன்னிலையில் நடைபெற்றது.


இதில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்சினை அதிகளவில் இருந்து வருவதாகவும், மினி மோட்டார் பம்ப் சர்வீஸ் செய்து தருவதாகக் கூறி மோட்டாரை திருடிச் சென்று விடுகிறார்கள் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.


கூட்டுறவு சங்கத்தின் மூலம் பெறப்பட்ட நகைக்கடன், பயிர்க்கடன், பயனாளி பட்டியல் வெளியிடப்படவில்லை, ஆனால் ஒரு லட்சம் ரூபாய்க்கு 10% கமிஷன் பெற்றுக்கொண்டு கூட்டுறவு சங்க மேலாளர் பயனாளிகளை தேர்வு செய்து முறைகேடுகளில் ஈடுபடுகிறார் எனவும்,


வீடு வழங்கும் திட்டத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்காமல் பணம் பெற்றுக்கொண்டு வீடு வழங்குகிறார்கள் என்றும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.


இதற்கான நடவடிக்கை விரைவில் வேண்டுமெனவும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது.


உடனடியாக நடவடிக்கை இல்லை எனில் எங்களின் அடுத்த கட்ட போராட்டம் சாலை மறியல் என்று மாளிகைமேடு கிராமமக்கள் எச்சரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

*/