அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பு ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தொகுப்பு ஊழியர்கள் 2010ஆம் ஆண்டு முதல் பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்கள் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு தீர்மானத்தின்படி இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் பல்கலைக்கழகம் அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் சுமார் 12 ஆண்டுகளாக ரூ.4000 முதல் ரூ.5000 வரை ஊதியத்தில் 205 தொகுப்பூதிய ஊழியர்கள் பணியாற்றி வந்தநிலையில் பணி நிரந்தரம் செய்யப்படாததால் இந்த மாதம் இறுதியுடன் பல்கலைக்கழகத்தில் வேலை கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது எனவே 205 குடும்பங்களை எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோவில் அருகே நேற்று முதல் நூற்றுக்கணக்கான தொகுப்பூதிய ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:
Post a Comment