விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் நலமான யாக்கை -வளமான வாழ்க்கை. விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி திருவள்ளுவர் கலையரங்கத்தில்.. இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தினர் நடத்திய... நலமான யாக்கை -வளமான வாழ்க்கை எனும் தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற இவ்விழாவில் உதவி பேராசிரியர் முனைவர் சுந்தர செல்வன் வரவேற்புரையாற்றினார்.கல்லூரி முதல்வர் ராஜவேல் தலைமை தாங்கினார்.
உடல்நலம், மனநலம் குறித்த விழிப்புணர்வு முகாமில் நீரழிவு நோய் மருத்துவ நிபுணர் வீ.என் செல்வம் பங்கேற்று உணவு பழக்க வழக்கங்கள் மூலம் உடலும், உயிரையும் பாதுகாப்பது, உடல் உறுப்புகளின் மீது கவனம் செலுத்தி நோய்களை தவிர்த்து, நோய் தடுப்பு வழி முறைகளைப் பின்பற்றி, உடல் செல்களை வலுப்படுத்தி, உடல் நல ஆரோக்கியத்துடன் வளமான வாழ்க்கை வாழ்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கி கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
சிறப்பு அழைப்பாளர் முனைவர் கணேசன் உதவி பேராசிரியர் முன்னிலை முனைவர் நிர்மல்குமார் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் இளைஞர் செஞ்சிலுவை இயக்கம் சங்கம் நிகழ்ச்சி முடிவில் முனைவர் கோ மணிகண்டன் உதவி பேராசிரியர் இணை திட்ட அலுவலர் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் நன்றியுரை வழங்கினார். இம்முகாமில், கல்லூரி பேராசிரியர்களும் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment