அந்த மனுவில் , உயர்மட்ட ஜாதிகளால் பட்டியல் சமூகத்தினர் வாழ்வாதாரம் மற்றும் உரிமை பாதிக்கப்படுவதை தடுக்கவே புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களால் இயற்றப்பட்ட சட்டத்தினால் தான் இன்றளவும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தல் முதல் குடியரசு தலைவர் தேர்தல் வரை பட்டியல் சமூகத்தினர் போட்டியிட்டு வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் தன்னுடைய சுய லாபத்திற்காக அரசியல் நோக்கத்திற்காகவும் தலையில் செருப்பு வைத்த சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மேயர் பதவி வழங்கி உள்ளோம் என்று ஜாதி வன்மத்தை கக்கி பட்டியல் சமூக மக்களை கொச்சை படுத்தி மாற்று சமூகத்தினரிடம் இருந்து பிரித்துக் காட்டி பழைய காலத்திற்கு கொண்டு செல்ல நினைக்கும் திண்டுக்கல் லியோனி மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டுள்ளது.
உடன் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் பாண்டுரங்கன் (மற்றும்) கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வீரராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்; சாகுல் அமீது

No comments:
Post a Comment