காட்டுமன்னார்கோயில் அருகே குறுங்குடி ஊராட்சியில் வழித்தவறி வந்த புள்ளிமானை வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள குறுங்குடி ஊராட்சிக்குட்பட்ட புளியடி தெருவில் வழிதவறி வந்த புள்ளிமான் ஒன்று தெருவுக்குள் நுழைந்து அதை அப்பகுதி பொதுமக்கள் பத்திரமாக மீட்டு சிதம்பரம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து வனக்காப்பாளர் அப்பகுதிக்கு உடனடியாக வந்து பொதுமக்களிடம் இருந்த புள்ளி மானை மீட்டு சிதம்பரம் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பின்பு பிச்சாவரம் காட்டில் கொண்டு விட்டனர்
செய்தியாளர் ; சூரியபிரகாஷ்

No comments:
Post a Comment