முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் திருத்தேர் வீதியுலா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 May 2022

முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் திருத்தேர் வீதியுலா

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள நகர் ஊராட்சியில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது, இக்கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் காலையில் அலகு வந்தனர் மாலையில் அம்மன் திருத்தேரை நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.


இந்தாண்டிற்கான திருவிழா கடந்த 3- ந் தேதி காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது, இன்று மே மாதம் 12 ந் தேதி காலை 9 மணிக்கு பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் ஊர்வலமாக வந்தனர்.


மாலை மூன்றுயளவில் உற்சவ அம்மன் திருத்தேரில் புறப்பட தயாரான போது பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப இளநீர், நொங்கு, வாழை, நெற்பயிர், கரும்பு ஆகியவற்றை வழங்கினார்கள் அதனை திருத்தேரில் கட்டி தேரை அழகு படுத்தினார்கள் பின்னர் முத்து மாரியம்மன் திருத்தேர் திருவீதியுலா நடைபெற்றது. இத்திருத்தேரை நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.

No comments:

Post a Comment

*/