விருத்தாசலம் அரசு மருத்துவமனை மற்றும் அரசினர் கல்லூரி மாணவியர் விடுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 May 2022

விருத்தாசலம் அரசு மருத்துவமனை மற்றும் அரசினர் கல்லூரி மாணவியர் விடுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

விருத்தாசலம் அரசு மருத்துவமனை மற்றும் அரசினர் கல்லூரி மாணவியர் விடுதி உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் சிகிச்சை அளிக்கும் முறை பற்றி கேட்டறிந்து பின்னர் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் மற்றும் அரசினர் கல்லூரி மாணவியர் விடுதி உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் 


கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனை மற்றும் ஆரம்ப அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், வரும் நோயாளிகள் மனத்திருப்தி அளிக்கும் வரை அவர்களுக்கு முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


மேலும் நம்ம மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்ற இயக்கம் ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் இயங்கி வருவதாகவும், மாவட்டத்தில் உள்ள 10 அரசு மருத்துவமனை மற்றும் 70 ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து நாட்களிலும் வெவ்வேறு திட்டப்பணிகளை மேற்க்கொள்வது குறித்தும், 


விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா, அனைத்து வார்டுகளையும் சுத்தமாக பராமரித்துவருகின்றனறா  என்றும்  தலைமை மருத்துவரிடம் கேட்டறிந்தார், 


மேலும் விருத்தாச்சலம் நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மருத்துவர்கள் பற்றாக்குறை, இட வசதியை மேம்படுத்துவது குறித்து அரசு கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும்,  தமிழக முதல்வர் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக ரூபாய் 35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,  கொரோனா  காலத்தில் படுக்கைகள் குறைவாக இருந்ததாகவும்,  புதியதாக மேலும் 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.



இந்த ஆய்வின் போது இணை இயக்குனர் ரமேஷ் பாபு தலைமை மருத்துவர் எழில் வட்டாட்சியர் தனபதி ஒன்றியக்குழு தலைவர் ஒன்றிய பெருந்தலைவர் (பொ) பூங்கோதை பொதுப்பணித்துறை பொறியாளர் தேவ சூர்யா நகர்மன்ற உறுப்பினர் சிங்காரவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

*/