இளம் பெண்ணிற்கு கருக்கலைப்பு மாத்திரை வழங்கிய தம்பதிக்கு போலிஸ் வலை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 9 May 2022

இளம் பெண்ணிற்கு கருக்கலைப்பு மாத்திரை வழங்கிய தம்பதிக்கு போலிஸ் வலை


மங்களூர் கிராமத்தில் இளம் பெண்ணிற்கு கருக்கலைப்பு மாத்திரை வழங்கிய தம்பதிக்கு போலிஸ் வலை

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள மங்களூர் கிராமத்தில்  இளம் பெண்ணிற்கு கருக்கலைப்பு மாத்திரை வழங்கிய தம்பதியினரை போலீசார் தேடி வருகின்றனர்.


கடலூர் மாவட்ட சுகாதார துறை மாவட்ட இணை இயக்குனர் ரமேஷ்பாபு தலைமையிலான மருத்துவக் குழுவினர் வேப்பூர் பகுதிகளிலுள்ள மருந்தகங்களில் மே 9 ந் தேதி  ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.


அப்போது, சிறுபாக்கம் அடுத்த மங்களூர் கிராமத்தில் ஒரு  வீட்டில் வைத்து இளம் பெண்ணிற்கு கருக்கலைப்பு பணி நடப்பதாக தகவல் மருத்துவ குழுவிற்கு தகவல் கிடைத்தது.அதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற மருத்துவக் குழுவினர் விசாரணையில் ஈடுபட்டனர். 

அதில், மங்களூர் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன்  குமார், வயது 48 என்பதும், அவரது வீட்டின் முதல் தளத்திலுள்ள அறையில் 22 வயது மதிக்கத்தக்க பெண்ணிற்கு கருக்கலைப்பு மாத்திரை வழங்கி உட்கார வைத்துள்ளதும் தெரிய வந்தது. 


அங்கு சென்ற மருத்துவ குழுவினர்  இளம் பெண்ணை மீட்டு , 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


 இது குறித்து புகாரில் சிறுபாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து, குமார் மற்றும் அவரது மனைவி சித்ராவை ஆகியோரை  தேடி வருகின்றனர். இதனால், மங்களூர்  அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

No comments:

Post a Comment

*/