புவனகிரியில் ரூ 17.50 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை!!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 9 May 2022

புவனகிரியில் ரூ 17.50 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை!!!!

புவனகிரியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு தொகுதி நிதியில் ரூ 17.50 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜையை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார் !!!


கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மஞ்சக்கொல்லை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான ஆ.அருண்மொழிதேவன் அவர்களின் தொகுதி நிதியிலிருந்து ரூபா 17.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் அதிமுக புவனகிரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றியக் குழு உறுப்பினருமான ஏஜி. சீனிவாசன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜான்சிராணி முன்னிலை வகித்தார்.


மேல் புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் வீ.வீராங்கன் வட்டாரப் பொறியாளர் சுரேஷ் வட்டார கல்வி அலுவலர் ஆர்.லக்ஷ்மி பள்ளி தலைமையாசிரியர் ராஜா ராமலிங்கம் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்.


நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும் கடலூர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் ஆ.அருண்மொழிதேவன் அவர்கள் கலந்துகொண்டு ஆன்மீக இறை வழிபாட்டுடன் பூமி பூஜையை தொடக்கி வைத்து பின்னர் பள்ளியின் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளியின் மேலாண்மை குழுத்தலைவர் அலமேலு மேலாண்மை கல்வியாளர் பன்னீர்செல்வம் ஆகியோருடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.


மேலும் நிகழ்ச்சியில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவர் வழக்கறிஞர் முருகமணி எம் ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை சங்கத் தலைவர் கானூர் பாலசுந்தரம் எம் ஆர் கே கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் வி .ஆர் .ஜே. விநாயகமூர்த்தி முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் எறும்பூர் லக்ஷ்மிநாராயணன் புவனகிரி மேற்கு ஒன்றிய கழக செயலாரும் ஒன்றிய குழு தலைவருமான சி. என். சிவப்பிரகாசம் கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ் .பி .கருப்பன் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சந்திரசேகரன் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் வேல்முருகன்


புவனகிரி மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் இ.ஜீ. பிரித்திவி புவனகிரி நகரகழக செயலாளர் செல்வகுமார் சேத்தியாதோப்பு நகர கழக செயலாளர் மணிகண்டன் ஊராட்சி கழக செயலாளர் ஏ.வி .ஜெயசீலன்முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வி.பி. சங்கர் தெற்கு திட்டை ஆனந்த் புவனகிரி மேற்கு ஒன்றிய கழக தகவல் தொழில்நுட்ப செயலாளர் சபரிராஜன் ஓட்டுநர் அணிசெயலாளர் பிரகாஷ் அம்மா பேரவை செயலாளர் சாமிநாதன் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் கிருபாபாகரன் உளுத்தூர் சுரேஷ் சாத்தப்பாடி குரு சித்தேரி சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கிராம பொதுமக்கள் எனப் பலரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் இறுதியாக பள்ளியின் உதவி ஆசிரியர்கள் சத்தியபாமா மரியலுமி ஆகியோர்கள் பள்ளியின் சார்பாக புவனகிரி சட்டமன்ற உறுப்பினருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி உரை வழங்கினர்.

No comments:

Post a Comment

*/