வேப்பூர் தாரா மருத்தகத்தில் மருந்து ஆய்வாளர் ஆய்வு - குழந்தை ரட்சிதா இறப்புக்கு வைரஸ் காய்ச்சலே காரணம் பிரேத பரிசோதனையில் தகவல் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 9 May 2022

வேப்பூர் தாரா மருத்தகத்தில் மருந்து ஆய்வாளர் ஆய்வு - குழந்தை ரட்சிதா இறப்புக்கு வைரஸ் காய்ச்சலே காரணம் பிரேத பரிசோதனையில் தகவல்


வேப்பூர் தாரா மருத்தகத்தில் மருந்து ஆய்வாளர் ஆய்வு - குழந்தை ரட்சிதா இறப்புக்கு வைரஸ் காய்ச்சலே காரணம் பிரேத பரிசோதனையில் தகவல் 


கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், (வயது 28) இவரது பெண் குழந்தை ரட்சிதா, (வயது 5.) இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரது பெற்றோர் நேற்று முன்தினம் வேப்பூர் தாரா மெடிக்கல் மற்றும் கிளினிக்கு சென்று சிகிச்சை அளித்தனர். பகல் 1:00 மணியளவில் மாத்திரை சாப்பிட்ட சில நிமிடங்களில் ரட்சிதா வாந்தி எடுத்து மயக்கமடைந்தார்.


வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்ததில், ரட்சிதா இறந்து விட்டதாக மருத்துவர் கூறினார். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


இந்நிலையில், விருத்தாசலம் சரக மருந்து ஆய்வாளர் நாராயணன் நேற்று மே 8 - ந் தேதி பகல் 12:30 மணியளவில் வேப்பூர் தாரா மெடிக்கல் மற்றும் கிளினிக்கில் சோதனை செய்தார். அதில், கிளினிக்கில் பார்மசிஸ்ட் இல்லாததும், முறையான ஆவணங்கள் பராமரிக்காததாலும், மருந்து மற்றும் அழகு சாதன சட்ட நடவடிக்கை எடுக்க விழுப்புரம் மண்டல உதவி இயக்குனருக்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவித்தார்.


இந்நிலையில், ரட்சிதா பிரேத பரிசோதனை அறிக்கையில் வைரஸ் காய்ச்சலாலும், சுமார் நான்கு நாட்கள் சரியாக உணவு சாப்பிட்டாமலும் இருந்ததால் குழந்தை இறந்தது தெரிய வந்தது. 


இது குறித்து வேப்பூர் எஸ்ஐ, சந்திரா வழக்குப் பதிந்து விசாரணை செய்தார்.

No comments:

Post a Comment

*/