விருத்தாசலம் அடுத்த இராசேந்திரப்பட்டிணத்தில் கிராமசபை கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 May 2022

விருத்தாசலம் அடுத்த இராசேந்திரப்பட்டிணத்தில் கிராமசபை கூட்டம்


விருத்தாசலம் அடுத்த இராசேந்திரப்பட்டிணத்தில் கிராமசபை கூட்டம்.


இராசேந்திரப்பட்டிணம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது. கிராமசபை கூட்டத்தில் ஊராட்சியின் வரவு செலவு கணக்குகள் குறித்தும், ஊராட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் மகளிர் மேம்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது. 


கிராமசபை கூட்டத்தில் உதவி வேளாண்மை அலுவலர் இராஜீவ்காந்தி மற்றும் கிராம உதவியாளர்கள் வேல்சாமி, செல்வராசு மற்றும் நியாய விலை கடை ஊழியர் பிரேமாவதி மற்றும் அங்கன்வாடி பொறுப்பாளர்கள் சத்யா, கிரிஜா மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்ட பொறுப்பாளர் பொன்மலர் ஆகியோர்கள் கலந்துகொண்டு மக்களுக்கு தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விளக்கினார்கள்.


பொது மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றினார்கள். நிறைவாக கிராமசபையில் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் ஊராட்சியின் நிர்வாகம் குறித்து மக்களிடையே விரிவாக பேசினார்.

No comments:

Post a Comment

*/