கடலூர் மாவட்டம் புவனகிரி முதல் குறிஞ்சிப்பாடி சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்தை தவிர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
புவனகிரி குறிஞ்சிப்பாடி சாலையில் வளைவுகள் அதிகமாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது தற்போது நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை விரிவாக்கம் செய்து வருகின்றனர் வடக்குத்திட்டை மற்றும் சித்தேரி சாலையில் 12 மீட்டர் சாலை 25 மீட்டர் ஆக விரிவாக்கம் செய்கின்றனர் இதற்கான ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு திட்டம் சார்பில் ரூபாய் ஒரு கோடி செலவில் பணிகள் துவங்கியது இதற்காக சாலையில் பணிகள் மேற்கொள்ள இந்த மார்க்கத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வடலூர் கரைமேடு ஆர்ச் மருதூர் கிருஷ்ணாபுரம் பூ .மணவெளி வழியாக புவனகிரி செல்வதற்கு போக்குவரத்து மாற்றி விடப்பட்டு அறிவித்தனர்.
அதன்படி காலை 6.00 மணி முதல் சாலை விரிவாக்கப் பணி துவங்கியது குறிப்பாக விவசாயத்திற்கு தண்ணீர் செல்லும் வகையில் ரோட்டின் குறுக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு 25 சிமெண்ட் குழாய்கள் ராட்சத கிரேன் மூலம் அமைத்தனர் பணிகள் குறித்து நெடுஞ்சாலை துறை உதவி இயக்குனர் பரமேஸ்வரி அவர்கள் நேரில் ஆய்வு செய்தார் உடன் இப் பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜெகன் விளக்கமளித்தார்.

No comments:
Post a Comment