பேரிடர் மீட்பு குழு மூலம் பொதுமக்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 23 May 2022

பேரிடர் மீட்பு குழு மூலம் பொதுமக்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி

ஆடுர் கிராமத்தில் பேரிடர் மீட்பு குழு மூலம் பொதுமக்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி. வருகின்ற பருவமழையை எதிர் கொள்ள இருப்பதால் குறிஞ்சிப்பாடி ஆடுர் கிராமத்தில் பேரிடர்  மீட்புக் குழு ஒத்திகை நிகழ்ச்சி வட்டாட்சியர் சுரேஷ்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் வடலூர் நகர மன்றத் தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.


சென்னை அரக்கோணத்தில் இருந்து வந்த  பேரிடர் மீட்புக்குழு   சார்ந்தவர்கள் பொதுமக்களுக்கு பேரிடர் காலங்களில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு தானாக முன்வந்து முதலுதவி சிகிச்சை அளிப்பது பற்றியும் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது பற்றியும் ஒத்திகை நிகழ்ச்சி செய்முறை விளக்கம் அளித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் மேலூம் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை நிலைய அலுவலர் சங்கர் அவர்கள்  பேரிடர் காலங்களில்  தற்காத்துக்கொள்வது பற்றியும் சக மனிதர்கள் பேரிடர் இடர்பாடுகளில் சிக்கிக்கொண்டால்  அவர்களை காப்பாற்றுவது பற்றி விளக்கம் அளித்தார். 


இதில்  பொதுமக்கள் ஆர்வமாக  கலந்துகொண்டு செயல்முறை விளக்கம் செய்வதை பார்த்து தெரிந்து கொண்டனர் நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை அலுவலர் வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

*/