வடலூர் அருகே அருகே பெண் பயணியர் ஒருவர் தகராறில் ஈடுப்பட்டதால் சாலையில் நிறுத்தபட்ட அரசு பேருந்து!!!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 May 2022

வடலூர் அருகே அருகே பெண் பயணியர் ஒருவர் தகராறில் ஈடுப்பட்டதால் சாலையில் நிறுத்தபட்ட அரசு பேருந்து!!!!!

 

வடலூர் அடுத்த மருவாய் அருகே பெண் பயணி ஒருவர் தகராறில் ஈடுப்பட்டதால் அரைமணி நேரமாக சாலையில் நிறுத்தபட்ட அரசு பேருந்து 


கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியிலிருந்து செல்லும் அரசு பேருந்தில் பெண் பயணி ஒருவர் தகராறில் ஈடுபட்டதால் பேருந்து மருவாய் அருகே நடுவழியில் நிறுத்த பட்டது.


வடலூர் இருந்து கிருஷ்ணாபுரம் நோக்கி TN 32 N3576 வழித்தடம் 24 புறப்பட்டு கிருஷ்ணாபுரம் நேக்கி சென்றுகொன்டு இருந்து பேருந்து மருவாய் அருகே வந்நபோது பேருந்து நிறுத்தம் இல்லாத இடத்தில் பெண் பயணி அவசரமாக திடீரென பேருந்தை நிறுத்த சொன்னதால் பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார்.


இதற்கு அந்த பெண் பயணி நாங்கள் இலவசமாக அரசு பேருந்தில் பயணிக்கும் பொழுது பேருந்து நிறுத்தம் இல்லாத இடத்தில் நிறுத்துகிரிர்கள் ஆனால் காசு கொடுத்து டிக்கெட் வாங்கும் பொழுது பேருந்தை நிறுத்த வில்லை என்று கூறி பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இடம் கடுமையான வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டார்.



அரை மணி நேரமாக பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தது இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தமிழக முதல்வர் அவர்கள் அண்மையில் பெண்களுக்கான கட்டணமில்லா இலவச பேருந்து பயணத்தை அறிவித்தார்.


ஆனால் அதை தவறாக பயன்படுத்தும் பெண் பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


செய்தியாளர்; தே. தனுஷ்

No comments:

Post a Comment

*/